கிளிநொச்சி மாவட்ட ஆனையிரவு பகுதியல் இளைஞர் ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது 390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.