deepamnews
இலங்கை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்களின் பின்னர் நேற்று கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட நிலையில் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் வேலை செய்த – மரணித்தவரின் காதலனான – எதிரியைக் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் மரணித்தவர் இறுதியாக வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றுடன் கைது செய்து ஆஜர்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

நேற்று கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்படதுடன் எதிரியின் இறுதிக் கருத்தும் கேட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றனர். நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.

Related posts

அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலங்கையில் அமைக்கும் சீனா

videodeepam

அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

videodeepam

சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து மீனவர்களை காப்பாற்றுங்கள் – இந்தியாவிடம் மீனவர்கள் கோரிக்கை.

videodeepam