கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் பெரும் காடுகள் கானப்படுவதால் இப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்ப்பத்தி தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த நிலையில். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுர போலீசாரால் பாரியளவு கசிப்பு கோடாக்கள் கைப்பற்றபட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ஆறு பெரல்களில் கசிப்பு உற்பத்திக்காக குளத்தின் நடுப்பகுதியில் தண்ணீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவை கிளிநொச்சி போலீசார் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கம் மற்றும் கிராம இளைஞர்கள் அனைவரும் இணைந்து கசிப்பு உற்பத்தி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆறு பரல் கோடாவையும் கிளிநொச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.