deepamnews
இலங்கை

ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்.

ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீரமானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ள என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் எதிர்வுகூறப்பட்ட வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாத காரணத்தினால் இந்த வரிகளை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.

இதன் ஊடாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வரிகளை உயர்த்துவது போல், வரி கட்டாதவர்களிடம் இருந்து வரியை வசூலிப்பதற்கு வரி தொடர்பான வலையமைப்பை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்

Related posts

மார்ச்சில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்- தேர்தல் ஆணைக்குழு உறுதி

videodeepam

எதிர்ப்பு போராட்டங்களை ஒன்றிணைப்போம் : உதய கம்மன்பில அழைப்பு

videodeepam

ஊழல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

videodeepam