deepamnews
இலங்கை

இலங்கைக்கு அருகே சக்தி வாய்ந்த நில நடுக்கம்! – ஆபத்து இல்லை என அறிவிப்பு

இலங்கைக்கு அருகே மிகவும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும், எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் புவிசரிதவியல் மற்றும் கட்டட ஆராய்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென புவிசரிதவியல் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் – தேர்தலை நடத்துமாறும் கோரிக்கை

videodeepam

தேக்கமரக் குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

videodeepam

வடமராட்சி கிழக்கிலும் மாடுகளுக்கு அம்மை நோய் தீவிர தடுப்பு நடவடிக்கையில் திணைக்களம்!

videodeepam