வெவ்வேறு இடங்களில் தமிழ் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய எஸ். கமல் என்ற நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, குருநாகல் மாவட்டம், மாவத்தகம பொலிஸ் பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய ஆர். ரஞ்சித் என்ற திருமணமான நபரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.