deepamnews
இலங்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் பின்னணியில் ரணில் இருக்கக்கூடும் –  சாணக்கியன் எச்சரிக்கை.

தமிழ் மக்களுடைய வாக்குகள்தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும். எனவே, தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுபவர்கள் குறித்து நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது உள்நோக்கங்களைப் பார்க்க வேண்டும். இதன் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கக்கூடும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்குத் தெற்கினுடைய அரச தரப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து அவதானித்து வருகின்றன. அது தொடர்பில் தொலைபேசி ஊடாக எனக்குப் பல அழைப்புக்கள் வந்து கொண்டிருக்கிறன. இதனைப் பார்க்கும்போது தெற்கிலே இருக்கும் பேரினவாத சக்திகள் தமிழ் பொது வேட்பாளர் விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதன் ஊடாக அதனைப் பிரபல்யப்படுத்துவதாகத் தெரிகின்றது.

இதன் பின்னணியில் உள்ள விடயங்களை நாம் பேசியாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் இன்றி தனியே சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் என்ற நிலை காணப்படும்போது தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளை நிறுத்தி தமிழ் மக்களுடைய விடயங்களை முன்னிறுத்தி அதற்கு ஆணை கோரும் சர்வஜன வாக்கெடுப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதனை நாங்கள் மிகவும் கவனமாகப்  பயன்படுத்த வேண்டும். ஒரு முறைதான் செய்யலாம். அதனை ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி வேட்பாளராக தமிழர் ஒருவரை நியமித்து மக்களிடம் வாக்களிக்குமாறு கோர முடியாது.” – என்றார்.

Related posts

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியில் ஓரங்கட்டப்படுகின்றன – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

videodeepam

இன்று முதல் வாகனப் பதிவு உள்ளிட்ட கட்டணங்கள் அதிகரிப்பு – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

videodeepam