அடுத்த வருடத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆரம்பகட்ட தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றேன்.”
– இவ்வாறு பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
” ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தயாராக உள்ளேன். எனினும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்தல், பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரிச் சுமையை குறைத்தல் ஆகியவை அந்த 10 நிபந்தனைகளுக்குள் உள்ளடங்குகின்றன.
இந்தநிலையில், 5 வருடங்கள் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்கும் போது, திட்டமிட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு இன்னும் 286 நாட்கள் உள்ளன.
அதற்கிடையில், அந்த 10 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நான் எதிர்பார்க்கின்றேன்.” – என்றார்.