முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணியை ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பதிலாக இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய கூட்டணியின் சின்னமாக வெற்றிலைக்கு பதிலாக கதிரையை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
1994 இல் கதிரைச் சின்னத்துடன் அமைக்கப்பட்ட பொதுமக்கள் முன்னணி மூலமாகவே பொதுத் தேர்தலில் வென்று அரசியலில் உச்சத்துக்கு சந்திரிகா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.