2023 ஆண்டின் உலகில் மிகவும் மாசடைந்த தலைநகரம் இந்தியாவின் புதுடில்லி என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட காற்றின் தரக் கண்காணிப்பு குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கடந்த வருடம், காற்று அதிகமாக மாசடைந்த நாடாக இந்தியா 3 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில், இந்தியா உள்ளிட்ட அதனை அண்டிய நாடுகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
அந்த ஆண்டில் இந்தியா 8 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
மோசமான தொழில்துறை ஒழுங்குமுறை காரணமாக தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பதால் புதுடில்லி உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் காற்றின் தரம் தொடர்ந்தும் மாசடைந்து வருவதாக சுவிட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட காற்றின் தரக் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.