மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால்; 41 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது 41 பெண்கள் உயிரழழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இறந்தவர்கள் அனைவரும் கைதிகளா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.