deepamnews
இலங்கை

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் – பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு.

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அதனை எதிர்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேஸில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் வாக்குவங்கி அரசியலுக்காக அதை எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனர். இருப்பினும் வாக்கு வங்கி அரசியலுக்கான வழியை பின்பற்றப்போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது.

ஒரே வீட்டில் உள்ள ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு மற்றொரு சட்டமும் இருந்தால் வீடு எவ்வாறு இயங்க முடியும்? இதேபோல், ஒரு நாடு எப்படி இரண்டு சட்டங்களில் இயங்கும்?

இந்தியாவில் தற்போது மத அடிப்படையில் பல்வேறு சிவில் சட்டங்கள் உள்ளன. எனினும் பொதுசிவில் சட்டம் என்பது, மதரீதியில் அல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டமாகும்.

மேலும் ஊழல்வாதிகள் அனைவரும் பிகார் மாநிலத்தில் கைகோர்த்துள்ளனர். ஊழல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இவர்கள் யாரும் சட்டத்திலிருந்து விலக முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தில் மாற்றமில்லை – நாணயச் சபை

videodeepam

இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கட்டாய நடைமுறை

videodeepam

கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்  – செல்வம் எம்.பி கோரிக்கை!

videodeepam