deepamnews
இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இந்த வாரம்.

அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95 வீதம் நிறைவடைந்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் அஸ்வெசும பயனாளர்களுக்கு அவர்களின் பிரிவிற்கேற்ப மாதாந்தம் 15000, 8,500, 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அஸ்வெசும திட்டம் தொடர்பாக கிடைத்துள்ள மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர், மற்றுமொரு பயனாளர்கள் குழு இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுவரென சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளன.

Related posts

அரிசியை இறக்குமதி செய்ய நேரிடலாம்-வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு.

videodeepam

2022 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் அறிவிப்பு.

videodeepam

சட்ட விரோத துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி.

videodeepam