deepamnews
இலங்கை

மூளாய் வைத்தியசாலைக்கு இரண்டு ஆம்புலன்ஸ்களை வழங்கிய இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்

ஜப்பான் மக்களின் நிதியனுசரணையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் இன்று காலை 9:30 மணியளவில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்  எச்.இ.மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு சின்னமாக வழங்கப்பட்டு தூதுவர் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்சியாக மூளாய் வைத்தியச்லையின் அனைத்து வசதி வாய்ப்புக்கள் குறித்தும் தூதுவர் ஆராய்ந்த நிலையில், தனது வருகையின் ஞாபகார்த்தமாக மரமொன்றினையும் வைத்தியசாலை வளாகத்தில் நாட்டி வைத்தார்.

இதன்பொழுது ஜப்பான் தூதுவர் மிசுகொசி, தூதுவராலய அதிகாரிகள், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையினர் , பணியாளர்கள், சங்கானை பிரதேச செயலர் , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி கூட்டுறவு ஆணையாளர் யாழ்ப்பாணம் உட்பட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு – உயிரிழந்தவர் அடையாளம்  

videodeepam

தேர்தலை நிறுத்தினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – விஜித ஹேரத்  எச்சரிக்கை

videodeepam

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் புதிய நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam