deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அடுத் தமாதம் 350 மில்லியன் டொலர்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பு தொடர்பான முதலாவது மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் செப்டம்பர் 11 ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரைமேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியதுடன், முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி கிடைக்கப் பெற்றது.

இந்நிலையிலேயே, அடுத்த மாதத்தில் மேலும் 350 மில்லியன் டொலர் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கிடைக்கும் சாத்தியம் காணப்படுகிறது என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது –  தமிழக அதிகாரியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

videodeepam

மன விரக்தியால் இளம் யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

videodeepam

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam