deepamnews
இலங்கை

தர்மபுரம் இளந்தாரகை விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் T-10 இளந்தாரகை அணி வெற்றி.

அமரர் சிந்துசன் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் தர்மபுரம் இளந்தாரகை விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் T-10 கடினப் பந்து கிரிக்கெட் தொடரினுடைய மாபெரும் இறுதிப்போட்டியில் இன்று கிளிநொச்சி யுனைட்டட் அணியை எதிர்கொண்டனர் தருமபுரம் இளந்தாரகை அணியினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இளந்தாரகை அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்ய அனுபவ வீரர் நித்தேசின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடனும் பண்டாவின் இறுதிநேர அதிரடியின் உதவியுடனும் 10 ஓவர்கள் முடிவில் 04 இலக்குகளை இழந்து 105 ஓட்டங்களை குவித்தனர்.

அணி சார்பில் அதிகபட்சமாக மகேந்திரன் நித்தேஸ் 29 பந்துகளில் 52 ஓட்டங்களையும், பண்டா 03 பந்துகளில் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.யுனைட்டட் அணியின் பந்து வீச்சில் பிரதி 2 இலக்குகளையும் சுபி மற்றும் பிரியன் தலா ஒரு இலக்கினையும் வீழ்த்தினர்.

106 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய யுனைட்டட் அணியினர் 10 ஓவர்களில் 06 இலக்குகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அணி சார்பில் அதிகபட்சமாக முல்லை 28 ஓட்டங்களையும் தானுஜன் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இளந்தாரகை அணியின் பந்து வீச்சில் அனுபவ வீரர் யோகீசன் 03 இலக்குகளையும் பண்டா 02 இலக்குகளையும் நிரோசன் ஒரு இலக்கினையும் வீழ்த்த முடிவில் 13 ஓட்டங்களால் இளந்தாரகை அணியினர் வெற்றயீட்டினர். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அரைச்சதம் கடந்த நித்தேஸ் தெரிவானார்.

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இளந்தாரகை அணியின் ரொபட் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக இளந்தாரகை அணியின் பண்டா தெரிவானார் இத்தொடரில் இளந்தாரகை அணியினர் பங்கு கொண்ட 05 போட்டிகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாண் , சீமெண்ட், பால் மா ஆகியவற்றின் விலையை தீர்மானிக்க நுகர்வோர் அதிகாரசபை தலையிடும் – நுகர்வோர் அதிகாரசபை

videodeepam

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் – அடுத்த வாரம் அறிவிப்பு

videodeepam

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் உறுதி-அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.

videodeepam