deepamnews
இலங்கை

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாதீபம் திலீபனின் நினைவேந்தல்!

பிராஸின் தலைநகர் பாரிஸ் 10ம் வட்டாரத்தில் தமிழர்களின் வர்தக மையான “ குட்டி யாழ்ப்பாணம்” என அழைக்கப்படும் சப்பல் La Chapelle பகுதியில், செப்டம்பர் 15ம் திகதி முதல் செப்படம்பர் 26ம் திகதிவரைபாரிஸ் 10ம் வட்டார காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் பொதுமக்கள் வணக்கம் செலுத்துவதற்காக தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் திலீபன் அவர்களின் 12 நாட்கள் உண்ணாவிரதம் குறித்த விளக்கமளிக்கப்படும் பதாகையும் பிரஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு மக்களைனதும், பாரிஸின் சுற்றாலாவாசிகளினது கவனத்தையும் ஈர்ததுகுறிப்பிடத்தகத்து.

குறித்த நிகழ்வு பிரான்சை தளமாக இயங்கும் சே நூ தமிழ் Ç’est Nous les Tamouls அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. திலீபன் தியாக தீபமாகிய நாளான செப்படம்பர் 26 செவ்வாய்கிழமை அன்று காலை 10.48 மணிக்கு நினைவேந்தல் நடைபெற்றது. 

பிராஸில் வாழும் தமிழ் மக்களும் , பாரிஸின் லா சப்பல் பகுதியின் தமிழ் வர்தகர்களிலும் இவ் நினைவேந்தலில் கலந்துகொண்டு தீலிபனுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts

புளெட், ரெலோ  தவிர்ந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்கிறார் சுமந்திரன் 

videodeepam

யாழில் நடைபெற்ற உலக அழகி போட்டி’

videodeepam

இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை பெரமுனவுக்கே உண்டு – நாமல் ராஜபக்ச

videodeepam