இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் மாயவனூர் பகுதியில் அன்றைய இரவு 9.00மணியலவில்தனியார் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற பொழுது இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட நிலையில்அடி காயங்களுடன் இளைஞரின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய நவரத்தினம் மதுசன் கல்மடு நகர் நாவல் காடு என்னும் முகவரியை சேர்ந்த இளைஞனின் சடலமே இனங்காணப்பட்டுள்ளது. இறந்த இளைஞரின் சடலம் இன்றைய தினம் 26.10.2023 நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சிமாவட்ட வைத்தி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் இறந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களுடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவத்துடன் தொடபுடைய எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை.