deepamnews
இலங்கை

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு.

யாழ். மாவட்டத்தில் நாளாந்தம் 200 பேர் போக்குவரத்து பொலிஸாரிடம் பிடிபடுவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு பேருக்கு நாளாந்தம் போக்குவரத்து பொலிஸார் தண்டப் பற்றுச்சீற்று வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாது செல்வோர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், வீதி நடைமுறைகளை பின்பற்றாமை.

மற்றும் சாரதி அனுமதிபத்திரம் இல்லாது பயணித்தமை, வருமான வரி மற்றும் ஏனைய வாகன சான்றிதழ்களை வைத்திருக்காமை போன்ற குற்றச்சாட்டுகளால் நாளாந்தம் தண்ட பற்றுச்சீட்டு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தண்டப்பற்றுச்சீட்டு வழங்கப்படுபவர்களில் 10 வீதமானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

videodeepam

பேராதனை பல்கலை முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் தொடர்பான விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

videodeepam

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பம்.

videodeepam