கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் உரிய காலத்தில் மழை இன்மை காரணமாக விவசாயிகள் பெரிதும் அல்லல் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் பெரும்போக நெற்செய்கைமேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் நெற்செய்கைக்கு கிருமினசினைகளோ அல்லது அடிக்கட்டு உரத்தை கூட இடமுடியாத நிலையில் விவசாயிகள்உள்ளனர் .
எமது பகுதி கல்மடுகுளத்தின் புனரமைப்புபணிகள் நடைபெருவதன் காரணமாக குளத்திளும் தண்ணீர் இல்லை இயற்கையை நம்பியே இம்முரை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுள்ளதாகவும்தெரிவித்துள்ளனர்
மேலும் தெரிவிக்கையில்
ஒவ்வொரு வருடமும் விவசாயிகளாகிய எமக்கே பல்வேறு வகையிலும் இயற்கையால் அரசாங்கத்தினாலும் பாதிப்பை எதிர்நோக்குவதாகவும் உரிய காலத்தில் நெல்செய்கைக்கான உள்லீடுகளை உரிய காலத்தில் பயன்படுத்தினால் மாத்திரமே உரிய அறுவடையினை பெறமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர் அத்துடன் விவசாயிகளுக்கான நெல்லின்விலை உரிய நேரத்தில் கிடைக்கப்பெறுவதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.