இஸ்ரேலில் போர் இடம்பெற்று வருகின்ற போதிலும், அங்குள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான எந்த கோரிக்கையினையும் முன்வைக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தொடர்ந்தும் பலர் இஸ்ரேலில் தொழில் வாய்ப்பை பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அந்த பணியகத்தின் பேச்சாளர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு வருடாந்தம் 2 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
அங்குள்ள இலங்கையர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக கருதுவதால் மீண்டும் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்காதிருக்க கூடும்.
அவ்வாறான எந்தவொரு முறைப்பாடும், இலங்கைக்கான தூதரகத்திற்கோ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கோ கிடைக்கப்பெறவில்லை.
காசாவில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையிலும், இஸ்ரேலுக்கான தொழில் வாய்ப்பு பயிற்சிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் காமினி செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.