deepamnews
இலங்கை

திருடர்களின் தொல்லை அதிகரிப்பு! பொலிசில் முறைப்பாடு செய்தும் எவ்வித பயனும் இல்லை -மக்கள் கவலை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளில் சமையல் எரிவாயு பணம் துரிச்சக்கர வண்டி மற்றும் பேட்டரி தொலைபோசி, என்பன வீட்டில் காணப்படுகின்ற எவ்வகையான பொருட்களாயின் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் திருடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்க படுகின்றது .

இதன் காரணமாக வீட்டிலிருந்து அத்தியாவசிய தேவை கருதி எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் அல்லது கோயில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர் இல்லாத சில நிமிடங்களிலே வீடுகளில் திருட்டுப் போய் வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வயது முறிந்தவர்கள் அங்கவீனமானோர் ஆகிய வீடுகளிலேயே இலக்கு வைத்துதொடர்ச்சியாக திருட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக சிலர் புது குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயமுமற்று போய் உள்ளதாகவும் இதன் காரணமாக சிலர் புது குடியிருப்பு போலீஸ் நிலையத்திற்கு செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மக்களிடம் சென்று உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு

videodeepam

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து  – விமான நிலையத்தில் பாதுகாப்பு

videodeepam

அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்கிறார்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

videodeepam