தமிழினத்தின் வரலாற்றில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் திருகோணமலையில் இன்று கூடி இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.