deepamnews
இலங்கை

முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! மதபோதகர் உட்பட மூவர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த (15.03.2024) இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ள குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

குழந்தையை குறித்த பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றி கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் குறித்த பெண்ணுடன் தொடர்புடயவராக சந்தேகிக்கப்படும் மதபோதகர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் முல்லைத்தீவிற்கு வந்து மதபோதனை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை கொலை செய்தததாக கூறப்படும் சந்தேகநபரான பெண்ணும் குறித்த மதபோதகரும் தவறான உறவில் இருந்ததாகவும் அதனாலேயே குறித்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர் ஒரு பதிவு செய்யப்படாத போதகர் என்பது தெரியவந்துள்ளதுடன் இந்த போதகர் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதி மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், பிரதான சந்தேகநபரான சிசுவின் தாயிடம் இருந்தே மேற்குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் போதகர் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மோட்டார் குண்டுகள் அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்க நடவடிக்கை..

videodeepam

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது

videodeepam

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

videodeepam