போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
15 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோய்ன், 269 கிராம் ஐஸ் மற்றும் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தமாக 85 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புகளில் 5 பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.