deepamnews
இலங்கை

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில், அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த அனுமதியை இரத்து செய்யுமாறு பதாதைகளை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த நிலையத்தினரால் ஒளிப்படம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியானது, பெண்கள் பாடசாலை அமைந்துள்ள பகுதி என்பதுடன், சிறுவர், பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Related posts

பாடசாலை விடுமுறை தொடர்பில் அதிபர்களுக்கு அதிகாரம்.

videodeepam

வாகன விபத்தில் சிக்கிய நிதி இராஜாங்க அமைச்சர்: காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

videodeepam

ஞானம் பெற்றவர் புத்தர் ; ஞானம் அற்றவர் சரத்த வீரசேகரர் – மறவன்புலோ சச்சிதானந்தம்

videodeepam