deepamnews
இலங்கை

கோதுமை மாவின் விலை வீழ்ச்சி

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது. எனினும், தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நிறைவேற்றுச் சபையின் மீளாய்விற்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் நிதி – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு.

videodeepam

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

videodeepam

இலங்கையை இனியும் வங்குரோத்து நாடாக கருத முடியாது – ஜனாதிபதி

videodeepam