சீனாவின் கோவிட் பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில், சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு வரத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேற்றுச் சந்தித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், விரைவில் நீங்கி, நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்புவதாகவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.
இலங்கை சவால்களை வெற்றி கொள்வதற்கு சீனாவின் உதவி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.