deepamnews
இலங்கை

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்  – யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 63 வயதான அன்னலிங்கம் திருச்செல்வி என்ற 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு டெங்கு காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Related posts

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்!

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியில் ஓரங்கட்டப்படுகின்றன – சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam