deepamnews
இலங்கை

விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு – கணவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் கஹடகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிகின்றார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

30 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் சந்தேகபர் கைது!

videodeepam

அரசுக்கு  எதிரான மற்றொரு பாரிய போராட்டத்துக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள்

videodeepam

கட்டாகாளி கால்நடைகளால் வீதிவிபத்து அதிகரிப்பு

videodeepam