deepamnews
இலங்கை

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலையேற்படும் – இரா.சம்பந்தன் கவலை

வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அரசியல்தீர்வு தொடர்பில் இலங்கை அரசாஙகம் தீர்வுகளை முன்வைக்கவில்லை,ஒரு பக்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும்மீள்குடியேற்றம் காரணமாக சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது அதேவேளை வன்முறைகள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் நாட்டிலிருந்து தப்பி வெளியேறுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும்.

சர்வதேச சமூகம் இந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது.

உலகிற்கு இது பிழையான முன்னுதாரணமாக மாறும்.

பிராந்தியத்திலும் நாட்டிலும் சமாதானத்தை சர்வதேச சமூகம் விரும்பினால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன

videodeepam

வெளியானது உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை!

videodeepam

புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் – பேராசிரியர் சன்ன ஜயசுமண

videodeepam