deepamnews
இந்தியா

இன்று சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது ஜனன தினம்!

882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர். சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார். 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது.

“பாரதி” பட்டம்
7-ஆவது வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவிபாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும், கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

Related posts

தமிழகத்தை சேர்ந்த பி.எப்.ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேர் கைது!

videodeepam

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

இந்தியாவின் மணிப்பூரில் ஊரடங்கு – வன்முறைகள் அதிகரிப்பு,   கண்டவுடன் சுட உத்தரவு

videodeepam