deepamnews
இலங்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு – ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதி

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பது தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதியளித்ததாக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜப்பானிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கைகள் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் குழு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் பழங்கள் மற்றும் இளநீர் வியாபாரத்தில் வீழ்ச்சி!

videodeepam

மிக வேகமாக குறைவடைந்து வரும் பணவீக்கம்:  மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பு  உறுதியானதும் உத்தியோகபூர்வ அறிவிப்பாம் – தம்மிக்க பெரேரா கூறுகிறார்.

videodeepam