deepamnews
இலங்கை

பதவி விலகுவதாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு

தாம் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  

பரவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை விரயம் செய்வதில் பலனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது என  சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.  

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  

எவ்வாறாயினும், ஒரு உறுப்பினர் விலகுவதால் ஆணைக்குழுவின் கூட்டங்களை நடத்துவதற்குத் தேவையான கோரத்தை பேணுவதற்கு தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,

Related posts

எதிர்ப்பு போராட்டங்களை ஒன்றிணைப்போம் : உதய கம்மன்பில அழைப்பு

videodeepam

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

யாழில் நிர்மலாவுக்கு அமோக வரவேற்பு – நல்லூர் கந்தனை தரிசித்தார்.

videodeepam