deepamnews
இலங்கை

திருகோணமலையிலிருந்து கடலுக்குச் சென்ற இலங்கை மீனவர்கள் 5 பேர் மியன்மாரில் தடுத்து வைப்பு

05 மீனவர்கள் மியன்மாரின் யாங்கூன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குறித்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

அந்த குழுவினர் திக்வெல்ல, வெலிகம மற்றும் திருகோணமலை பகுதிகளில் வசிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீனவர்களின் படகு வேறொரு படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டதாக மீனவர்களின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவர்கள் இது குறித்து கடற்றொழில் திணைக்களத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடன் விவகாரங்களில் இலங்கை அதிகாரிகளின் முன்னேற்றத்தை வரவேற்கிறது சர்வதேச நாணய நிதியம்

videodeepam

ஆலயத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருட்டு.

videodeepam

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல – மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு

videodeepam