தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு கோரி தாம் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஹிரு செய்தி வினவலில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தலைவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிட்பபட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இந்த அறிவிப்பு வெளிட்பபட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த, வேட்பாளர்களின் பிரசார பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.