பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பிரஜைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இணையுமாறு அனைத்து அரசியல்வாதிகளிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.
ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கௌரவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு ரோயல் கல்லூரி மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்க முடியாது எனவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.