deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

யாழ்ப்பாணம் –அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எக்ஸ்-பிரஸ் பேர்லின் சேதத்திற்கு எதிராக வெளிநாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் – நீதி அமைச்சு

videodeepam

இராட்சத சுனாமி ஏற்படும் அபாயம் –  ஆய்வாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பு

videodeepam