deepamnews
இலங்கை

அதானி நிறுவன பங்குகள் வீழ்ச்சி- இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பில்லை என்கிறார்  அலி சப்ரி

இந்தியாவில் அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைவதன் காரணமாக, அந்நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்ததன் பின்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அறிமுகத்தின் அடிப்படையிலேயே அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இருநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புடைய விடயம் என்பதன் காரணமாக இலங்கை பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதானி நிறுவனம் இலங்கையில் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின் உற்பத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

Related posts

வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை – ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு.

videodeepam

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு

videodeepam

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

videodeepam