deepamnews
இலங்கை

காற்றாலை மின் திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ் முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

அத்தோடு அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். இலங்கையில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

Related posts

மின் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் -இலங்கை மின்சார சபை அறிவிப்பு.

videodeepam

மின்தடை தொடர்பில் பொது மக்களுக்கு இலங்கை மின்சார சபை பொது விடுத்துள்ள அறிவிப்பு.

videodeepam

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

videodeepam