பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு வந்த போது கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக வீதியை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இதுவாகும்.
குருந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றயதினம் (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு ஜூன் 19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.