deepamnews
இலங்கை

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு

இலங்கையில் விவசாயத் துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக நடந்து வரும் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டிக்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.

அண்மையில் இலங்கை வந்த உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் விவசாய அமைச்சருமான மஹிந்த அமரவீரவுடன் இத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அங்கு இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டம் தற்போது பெரும் பங்காற்றுவதால் அதனைத் தொடருமாறு உலக வங்கிக் குழுவிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இதன்படி, இந்த ஆண்டு மே மாதம் முதல் மேலும் 18 மாதங்களுக்கு இத்திட்டத்தை பராமரிப்பதற்கு 30 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுமக்ளை பாதுகாக்க ஜனாதிபதி இராணுவத்துக்கு அவசர அழைப்பு!

videodeepam

06ஆம் தரத்திற்கான அனுமதி பதிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான வசதி

videodeepam

இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு!

videodeepam