deepamnews
இலங்கை

ஹிக்கடுவையில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பெண் ஒருவர் கைது

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவில் இரட்டை கொலைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவரை ஹிக்கடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரணகம வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி தற்போது மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருக்கும் ‘புரு முனா’ என்பவரே 20 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் இந்த இரட்டை கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, டி56 துப்பாக்கி மற்றும் 20 இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்து புரு மூனா கொலைக்கு உதவிய சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஹிக்கடுவை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர்.

சந்தேக நபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 2 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல் .

videodeepam

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – நிதி அமைச்சருக்கு அனுமதியளிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

videodeepam

வடக்கில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் – ஐயர் ஒருவர் வெட்டிக்கொலை!

videodeepam