deepamnews
இலங்கை

எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்கவில்லை- ஹரீன் பெர்னாண்டோ கவலை தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன் தொடர்பில் ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ள கடன் விவகாரம் தொடர்பில் ஒருபோதும் எதிர்க்கட்சி தனது ஒத்துழைப்பை வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொண்டாலும் அதனை அரசாங்கத்தினால் மீள செலுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சியின்  சிலர் மேடைகளில் பேசி வந்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ளவர்கள் சிலரும் கூட சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் கடன் வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது அந்த நிதியத்தின் கடன் எமக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Related posts

விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம் – தமிழரசின் புதிய தலைவர் சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு.

videodeepam

வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

videodeepam

யாழில் ஆளுநர் பங்கு பற்றுதலுடன் சித்திரை புத்தாண்டு விழா

videodeepam