ஆசிரியர்களுக்கான தொழிற்சங்க இயக்கங்கள் தேவையா இல்லையா என்பதை கண்டறிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசிரியரின் மனம் தொழிற்சங்க மனமாக இருக்கும் போது, பள்ளி மாணவர்களின் மனம் சிதைக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கேற்ப, நாட்டின் அனைத்து மாணவர்களின் நலனுக்காக, தனி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஏனையவர்களின் அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர்கள் தமது தொழிலைப் பலியிடக் கூடாது எனவும் ஆசிரியர்கள் தொழிற்சங்க இயக்கங்களில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை ஆசிரியர்கள் மீண்டுமொருமுறை சிந்திக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
தேசிய ஊழியர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.