நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் வசதிகள் கிடைப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதே விலை வீழ்ச்சிக்கு காரணம்.
நேற்று மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை 10,000 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது ஒரு பவுன் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.