deepamnews
இலங்கை

நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல தீர்மானம் – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் விடுவிக்கப்படாமை தொடர்பில், நிதி அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய, நிதி விடுவிக்கப்படவில்லை என்பதுடன், அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்திற்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும் நிதியை விடுவிக்காதிருப்பது,  நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்

videodeepam

முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! மதபோதகர் உட்பட மூவர் கைது.

videodeepam

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது அரசியல் தீர்வைப் பெற முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam