deepamnews
இலங்கை

தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெட்டுக்குநாறி மலை.

வவுனியா மாபாட்டு ஸ்தலத்தின் சிதைப்புவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டதும் மலை உச்சியில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம் புதருக்குள் தூக்கி வீசப்பட்டதும் மிக மிலேச்சத்தனமான செயலாகும்.
தமிழர்களின் பண்பாட்டு பாரப்பரிய வாழ்விடங்களையும் வழிபாட்டு இடங்களையும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்டுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே ஆகும்.
குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் உதாசீனப்படுத்தி பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகையில் தமிழ்ர்களின் பண்பாட்டு பாரம்பரிய வழிபாட்டுத்தலமாக வெட்டுக்குநாறி மலையில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்கள் தகர்த்தெறியப்படுகின்றன.
ஒரு இனத்தின் மொழியையும் அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அழித்தால் அவ்வினம் தானேகவே அழிந்துவிடும் என்பதற்கு உட்பட்டே இவ்வாறான பண்பாட்டு இனஅழிப்பு நடவடிக்கைகள் எமது மண்ணில் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இதற்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் எமது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதனை காலம் உணர்த்தி நிற்கின்றது.
சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்
முன்னாள் முதல்வர் யாழ்.மாநகர சபை

Related posts

இலங்கையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகப்பு – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

videodeepam

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமல்லா சலுகைகள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது முக்கியமானது – விக்டோரியா நுலண்ட் தெரிவிப்பு

videodeepam