deepamnews
இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பில் சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,  

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம். அரசியல் கொள்கை ரீதியில் இரு தரப்பிற்கும் இடையில் வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில் செயற்படும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது அடிப்படையற்றது, நாளை தேர்தல் இடம்பெற்றாலும் போட்டியிட தயாராகவுள்ளோம். தேர்தலை விரைவாக நடத்துமாறு குறிப்பிடும் எதிர்க்கட்சிகள் தான் தேர்தலை ஏதாவதொரு வழியில் பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாக செய்தி அடிப்படையற்றது, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும். கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிப்பு ..

videodeepam

செலவுகளை ஐந்து வீதத்தால் குறைக்குமாறு அமைச்சுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

videodeepam

இளைஞர்களின் மரண உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

videodeepam