deepamnews
இலங்கை

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மிகவும் பொருத்தமான தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தமது கட்சி தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேருவளை தொகுதி மகளிர் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த நேரத்தில், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப இரண்டு பேர் முன் வந்தனர். ஒருவர் எமது கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும. மற்றைய நபர் திரு.ரணில் விக்கிரமசிங்க. அவருடன் எங்களுக்கு அரசியல் மோதல் ஏற்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் சர்வதேசத்தை சமாளிக்கக் கூடிய தலைவர் அவர்தான் என்று விவாதித்து முடிவு செய்தோம். கட்சி என்ற ரீதியில் நாம் எடுத்த சரியான முடிவின் முடிவுகளை இன்று காணலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்கட்டணம் செலுத்தாத மஹிந்த ராஜபக்ச –  நாமல் வழங்கியுள்ள பதில்

videodeepam

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் – பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு.

videodeepam

ஊர்காவற்துறையில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு

videodeepam